பொன்சேகாவின் அறைகூவலின் பின்னால் மறைந்துள்ள சதி
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் போராட்டத்திற்கு நாள் கொடுப்பது என்பது அரசாங்கத்தின் சதித்திட்டத்தின் ஒரு பகுதி என சர்வ கட்சிப் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அது தெளிவாக ஆர்ப்பாட்டக்காரர்ககளை ஆபத்தில் தள்ளும் செயலாகும்.
ஆளுமைகளைச் சுற்றியல்ல, ஜனரஞ்சக அணுகுமுறை மற்றும் வெற்றிகரமான திட்டங்கள் மூலம் போராட்டம் புத்துயிர் பெறும் வரை ஆட்சியாளர்கள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என சர்வ கட்சிப் போராட்டக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொன்சேகா அறைகூவல்
சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது எதிர்வரும் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், பொய்யான தூண்டுதல்களில் சிக்காமலும் போராட்டத்தின் மீதான நம்பிக்கையை குலைக்க வேண்டாம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் செயற்பாடு
போராட்டத்தின் உண்மையான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, போராட்டக்காரர்களை குறிவைத்து அரச அடக்குமுறையை மேற்கொண்டு வருகின்றது.
போராட்டத்தை அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சியான கூறி சதி பயத்தை ஆயுதமாகப் பயன்படுத்திய சந்தர்ப்பவாதிகள் மற்றும் அரசியல்வாதிகளை ஒப்பந்த முறையில் முன்னுக்கு கொண்டு வந்திருப்பதும் வேடிக்கையானதென சர்வ கட்சிப் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.