கோவிட் பரவல் குறித்து பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் பிரித்தானியாவில் கோவிட் பரவல் உயர்வடையும் என பேராசிரியர் ஆடம் ஃபின் (Prof Adam Finn) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துக் கூட்டுக் குழுவின் பேராசிரியர் ஆடம் ஃபின் (Prof Adam Finn) மேலும் தெரிவிக்கையில்,
“பிரித்தானியா இன்னும் ஆபத்தில் இருக்கின்றது எனவும், எனவே கட்டுப்பாடுகளை தளர்த் வேண்டிய திகதிகளில் மாற்றம் தேவை எனவும் பேராசிரியர் ஆடம் ஃபின் (Prof Adam Finn) சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்கான அடுத்த கட்டம் திட்டமிட்டபடி தொடர முடியாது என்று தெரிவிக்க எந்த தரவுகளும் இல்லை என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) கூறியுள்ளார்.
எனினும், இந்த ஆண்டு ஏதேனும் ஒரு கட்டத்தில் வைரஸின் மூன்றாவது அலை இருக்கும் என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் "உறுதியாகக் கருதுகின்றனர்" என்று போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) தெரிவித்துள்ளார்.
அரச புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் முதன் முறையாக வைத்தியசாலைகளில், 2,000க்கும் குறைவான கோவிட் நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை புள்ளிவிவரங்களின்படி 2,004 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரையில் 10.7 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டாது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பொருள் பிரித்தானியாவில் ஐந்து பெரியவர்களில் ஒருவருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிபிசி செய்தி சேவைக்கு இன்று கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஆடம் ஃபின் (Prof Adam Finn) “JCVI தரவுகளின் படி, கோவிட் - 19 பரவல் கோடை காலத்தில் அதிகமாக இருக்கும் என தெளிவாக காட்டுவதாக கூறியுள்ளார்.
ஒரு புதிய அலை பற்றி பேசுவது மிகவும் ஆபத்தானது.
நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு துரதிர்ஷ்டவசமாக தவிர்க்க முடியாதது, ஆனால் இது ஜனவரி மாதத்தில் இருந்ததைப் போலவே பேரழிவு தரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, நாம் அவதானமாக இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.