சுவிட்சர்லாந்தில் கைத்தொலைபேசி பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கைத்தொலைபேசிகளுக்கு லிங்குகளுடன் (Link) குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் நிலையில் அதனை கிளிக் (Click) செய்தால் செயலியொன்று (App) தரவிறக்கம் (Download) செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையிலேயே குறித்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும், அந்த குறுஞ்செய்தியை உடனே அழித்து விடுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலி கைத்தொலைபேசியில் தரவிறக்கமாகி விட்டால் கைத்தொலைபேசியில் அனைத்து தரவுகளையும் இழக்க நேரிடலாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சுவிஸில் கைத்தொலைபேசி பயனர்கள் நூற்றுக்கணக்கானனோருக்கு இவ்வாறு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய சைபர் செக்யூரிட்டி மையம் தெரிவித்துள்ளது.