பேரழிவை நோக்கிச் செல்லும் இலங்கை! அக்கறையற்ற அரசாங்கம்
ஒமிக்ரோன் மாறுபாடு நாட்டில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் விகாரமாக மாறியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
தொற்று வீதத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கோ அல்லது சுகாதார அதிகாரிகளுக்கோ அக்கறை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை புறக்கணிப்பதனால் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், தொற்றுநோய் கடந்துவிட்டது என்ற அனுமானத்தின் கீழ் பூஸ்டர் டோஸினை பெறுவதற்கான உத்தரவுகளை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகாரிகளினால் உறுதிபடுத்தப்பட்டதை விட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் செல்வதாக அவர் எச்சரித்துள்ளார்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan