பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை
க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவ, மாணவியருக்கு கோவிட் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் தனியார் வகுப்புக்கள் குறித்த துண்டுப்பிரசுர விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்வதன் மூலம் கோவிட் நோய்த் தொற்று மாணவர்களுக்கு பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்வது தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் பரீட்சை நிலையங்களுக்கு வெளியே துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர், பொலிஸாரிடம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்யும் நபர்களுடன் மாணவர்கள் தொடர்பு பேணக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்து பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவை தொடங்கிய ஜீ தமிழ்.. அர்ச்சனா தொகுப்பாளினி, நடுவர்கள் யார் யார்? Cineulagam

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்: புலம்பெயர்தல் மீது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
