ஜனாதிபதி, பிரதமருக்கு அரச புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அவசர எச்சரிக்கை
நாட்டில் பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி நிலைமைகளால் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புரட்சியொன்றை தூண்டிவிட சில குழுக்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் சில அரசியல் கட்சிகள் தொடர்புபட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அது நடக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் நெருக்கடி என்பன நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்தப் புரட்சிக்கு திட்டமிடப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தி தொடர்பான விரிவான செய்திகளுடன் மேலும் பல செய்திகளை கொண்டு வருகின்றது பத்திரிகை கண்ணோட்டம்,
அரச புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை
இந்தநிலையில் அரச புலனாய்வுப் பிரிவினர் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன், இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அரச உயர் மட்டத்திற்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்தக் காலத்தில் மக்களிடையே செல்லுதல், பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளல் என்பவற்றை தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி, பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.