இலங்கையை அச்சுறுத்தும் டெல்டா வைரஸ் குறித்து எச்சரிக்கை
பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் எதிர்வரும் 8 முதல் 10 வாரங்களுக்குள் நாட்டின் பிரதான வைரஸாக டெல்டா காணப்படும் என விசேட வைத்தியர்கள் எச்சரிக்கை டுத்துள்ளனர்.
மக்கள் உரிய சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த நிலைமை மிகவும் ஆபத்தாக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இந்த டெல்டா வைரஸ் மாறுபாடு தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் உரிய சுகாதார வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இல்லை என்றால் எதிர்வரம் 8 வாரங்கள் மிகவும் அவதானமிக்க நிலைமையாக மாறிவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




