ஹிஸ்புல்லாவால் இஸ்ரேலியர்களுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை செய்தி
இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தை குறிவைத்து ஹிஸ்புல்லாவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது அந்த அமைப்பு இஸ்ரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை வழங்கியுள்ளதாக இராணுவ மற்றும் பாதுகாப்பு ஆய்வாளரான எலிஜா மேக்னியர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலானது மிகவும் ஆபத்தான போக்கை எடுத்துக்காட்டுவதாக எலிஜா மேக்னியர் கவலை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலின் பாரிய நகரமான ஹைஃபவில் கடற்படை தளம் இரசாயனத் தொழிற்சாலைகள் அதிகமாக காணப்படுவதால் இந்த தாக்குதலானது பாரிய விளைவுகை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் இராணுவம்
இந்நிலையில் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவால் ஏவப்பட்ட 5 ஏவுகணைகள் துறைமுக நகரமான ஹைஃபாவை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் ஒரு உணவகம், வீடு மற்றும் பிரதான வீதி ஒன்றும் சேதமடைந்ததில் ஐந்து பேர் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam