இலங்கையில் வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டில் முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் 1406 வாகன திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 2021ம் ஆண்டில் நாட்டில் மொத்தமாக 1405 வாகன திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள்
அதிக எண்ணிக்கையிலான வாகனத் திருட்டுக்கள், மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் 976 மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 1116 மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஒன்பது மாதங்களில் 311 முச்சக்கர வண்டிகள் களவாடப்பட்டுள்ளன. கடந்த 2021ம் ஆண்டில் மொத்தமாக 353 முச்சக்கர வண்டிகள் களவாடப்பட்டுளதாக தெரிவித்துள்ளார்.
வாகன உரிமையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
இந்த ஆண்டில் 14 கார்கள் மற்றும் 25 வான்களும் களவாடப்பட்டுள்ளன. வாகன உரிமையாளர்களின் கவனயீனமே இவ்வாறு வாகனத் திருட்டுக்களுக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.
வாகனங்களை நிறுத்தும் போது அவதானத்துடன் நிறுத்தி வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
