பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பொது மக்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை (TRCSL) ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி, தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு, பரிசுகளை வென்றுள்ளதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரிசு கோரிக்கைகளின் நம்பகத்தன்மை
இவ்வாறு மோசடி செய்பவர்கள், தனிநபர்களிடம் பரிசு வென்றுள்ளதாக தெரிவித்து, குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு பரிசுகளைப் பெற வரி அல்லது கட்டணங்களைச் செலுத்துமாறு, மோசடிக்காரர்கள் பணமோசடியில் ஈடுபடுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரான விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இதுபோன்ற மோசடிகளுக்கு உட்படாமல் இருக்கவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளதோடு எந்தவொரு பரிசு கோரிக்கைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், தேவையற்ற செய்திகள் அல்லது அழைப்புகளின் அடிப்படையில் எந்தப் பணத்தையும் செலுத்த வேண்டாம் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |