இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (04.03.2026) வளித்தரச் சுட்டி ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு, அத்துடன் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அந்தவகையில், கொலன்னாவை, கோட்டை, கேகாலை மற்றும் காலி ஆகிய இடங்களில் வளித்தரச் சுட்டி ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் காரணமாக, பொதுமக்கள் திறந்தவெளிகளில் நடமாடும்போது அவதானமாக இருக்குமாறும், குறிப்பாக இதய நோய் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 9 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam