கோவிட் பரவல் தொடர்பில் இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டில் ஏதேனுமொரு வகையில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்குமானால் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிச்சை விடுக்கப்பட்டுள்ளது.
தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்குமாயின் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை இலங்கையிலும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது.
இந்நிலையில், அந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்கு மக்கள் சார்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும். வெள்ளியன்று 1600 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
இந்தியாவில் தற்போதுள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு முன் ஆயதங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த நிலைமையை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். ஆனால் அங்குள்ள நிலைமையைப் போன்று ஏற்படக் கூடிய அபாயமும் உண்டு.
எனவே தொற்றுக்கான ஏதேனுமொரு அறிகுறி காணப்படுபவர்கள் அவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்காமல் வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
எனவே இந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்காக மக்கள் அவர்கள் சார்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது மிக முக்கியத்துவமுடையதாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  
    
    
    
    
    
    
    
    
    
    உலக கோப்பை வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணி.. தளபதி விஜய் முதல் சமந்தா வரை பிரபலங்கள் வாழ்த்து மழை Cineulagam