நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் அண்மைய நாட்களாக காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதால் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
அதன்படி நாட்டில் இன்று (07) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, புத்தளம், பதுளை, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் சிறிது ஆரோக்கியமற்ற நிலையிலும் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
மாசுபட்ட காற்று சுற்றோட்டம்
மேலும் காற்றின் தரக்குறியீடு 68 மற்றும் 114 க்கு இடையில் பதிவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், எல்லை கடந்து வரும் மாசுபட்ட காற்று சுற்றோட்டத்தினால் நாடு முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் சில நாட்களுக்கு அதிகரிக்கலாம்.
காற்றின் தரம் குறைவதால், முகக்கவசம் அணிவதோடு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |