பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றின் வேதனமாக 1700 ரூபாயை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிராக உயர்நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக பெருந்தோட்டத்துறை நிறுவனங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொட்டகலையில் (Kotagala) நடத்தப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேதனப்பிரச்சினை
இதுவரை நாளொன்றுக்கு 1000 ரூபாயை வேதனமாக பெறும் பெருந்தோட்ட தொழிலாளி ஒருவர் 1700 ரூபாயை பெறுவார் என்று விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
எனினும், ஆரம்பத்தில் இருந்தே இந்த ஏற்பாட்டுக்கு பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் உடன்பாட்டை தெரிவிக்கவில்லை.
முன்னதாக இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களிலும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில், குறித்த சம்மேளனம் உயர்நீதிமன்றுக்கு செல்லுமானால், மீண்டும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனப்பிரச்சினை தொடரும் பிரச்சினையாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |