மட்டக்களப்பில் தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் தென்கிழக்கே நிலவிய சுழற்சியானது தாழ்வுப் பகுதியாகி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தொடர்ச்சியாக மழையினை எதிர்பார்க்கமுடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
கன மழையால் விவசாயிகள் பாதிப்பு
நேற்று(16.02.2026) மாலை தொடக்கம் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் நிலைமை காணப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக தாழ்நிலங்கள் வெள்ள நீரினால் மூழ்கும் நிலைமையேற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் நடைபெற்றுவருவதன் காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், அறுவடை செய்தவர்கள் நெல்லை பாதுகாப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...