உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து: ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை
காலநிலை மாற்றத்தாலும், அதிகரித்து வரும் சுற்றுச் சூழல் மாசுபாட்டினாலும் உலக அளவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்படுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளன.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்>
உலக நாடுகள் ஓர் ஆபத்தான பாதையில் பயணிக்கின்றன. நுகர்வு கலாச்சாரம், காலநிலை மாற்றம் மற்றும் அதி தீவிர வளர்ச்சியினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளது.
அளவுக்கு அதிகமான மாசுபாடு தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் புகை, மனிதர்களின் பயன்பாட்டிலுள்ள வாகனங்கள் இதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளன. காற்று மாசுப்பாடு புவியில் காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, புவி வெப்பமடைதலை அதிகரித்து நீர் பற்றாக்குறையை தீவிரமாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஆண்டுக்கு 300 கோடி மக்கள் நீர் பற்றாக்குறையால் வாழ்கின்றனர் எனவும் ஐ.நாவின் ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இது பற்றி மனித குலத்தின் உயிர் நாடியான நீர் மாசுபாட்டாலும், காலநிலை மாற்றத்தாலும் தண்ணீர் பஞ்சம் உண்டாகிறது என்று ஐ.நாவின் பொதுச்செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் தெரிவித்துள்ளார்.