எதிர்காலத்தில் மக்கள் யானைகளை பார்க்கமுடியாத நிலை ஏற்படலாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தற்போதைய அரசாங்கம் எடுத்து வரும் தவறான நடவடிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளே யானைகளின் இறப்பு அதிகரிப்புக்கு காரணம் என்று காட்டு யானைகள் தொடர்பான ஆராய்ச்சியாளர் சமீர வீரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று நடைபெற்ற மனு கையெழுத்து பிரசாரத்தின் போது ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் யானைகளின் இறப்பு கணிசமாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத மின்சார வேலி
பெரும்பாலான யானைகள் துப்பாக்கிச் சூடுகளாலும், ஹக்கா பட்டாக்கள் மற்றும் சட்டவிரோத மின்சார வேலிகளைப் பயன்படுத்துவதாலும் கொல்லப்பட்டன.
யானைகளைக் கொல்லும் மக்களின் அச்சமின்மையே இந்தக் கொலைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
அவர்கள் சட்டத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை, மனித யானை மோதலை தவறான கோணத்தில் கையாளுகிறார்கள்.
மனித-யானை மோதல் என்ற போர்வையில் யானைகளை கொல்வது ஒரு போக்காக மாறிவிட்டது.
மனித-யானை மோதல்
அதன்படி, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தினமும் ஏராளமான யானைகள் கொல்லப்படுகின்றன.
இந்தக் கொலைப் போக்கு அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் மக்கள் யானைகளைப் பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன, மேலும் இந்த ஆண்டின் முதல் மாதங்களில் 100க்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டுள்ளன என்றும் காட்டு யானைகள் தொடர்பான ஆராய்ச்சியாளர் சமீர வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
