எச்சரிக்கை மட்டத்தில் வெப்பம் - 17 மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளில் நாளை (03) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, நாளை (03) 17 மாவட்டங்களில் பகல் முழுவதும் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடல் உணரும் வெப்பநிலை, 'எச்சரிக்கை' மட்டத்தில் நீடிக்கக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம்! பல மாதங்களாக மறைக்கப்பட்ட டொலர் மோசடி - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
வெப்ப எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, மொனராகல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நேரத்தில் அதிகப்படியான வெளிப்பாடும் செயல்பாடும் சோர்வை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் நீரிழப்பு மற்றும் உப்பு இழப்பு காரணமாக தசைப்பிடிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம்..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை