ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
இலங்கையில் ஆட்பதிவு திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்தின் எண்களான 115226126, +94115226126, +0115226126 மற்றும் கையடக்க தொலைபேசி எண்களான 0771167739, 0742756098 ஆகியவற்றை பயன்படுத்தி, ஒரு தரப்பினர் திணைக்களத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்தத் தரப்பினர் அரசின் சின்னத்தை பயன்படுத்தி ஒரு யைக்க தொலைபேசி செயலியை உருவாக்கி, டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக உங்கள் தகவல்களைப் பதிவு செய்வதாக கூறி, திணைக்களத்தின் பெயரைத் தவறாக பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
கையடக்க தொலைபேசி
ஆட்பதிவு திணைக்களம் தாங்கள் இதுபோன்ற பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும் அத்தகைய கையடக்க தொலைபேசிகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கு தங்கள் தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு வலியுறுத்துகிறது.

மேலும், திணைக்களத்தின் உதவி எண்ணை அழைத்தோ அல்லது https://drpgov-lk.com என்ற அத்துறையின் இணையதளத்தை போன்ற ஒரு போலி இணையதளத்தை பயன்படுத்தியோ உங்கள் தகவல்களை கேட்டால், அந்தத் தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுவரை இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அல்லது டிஜிட்டல் அடையாள அட்டைக்கான எந்தப் பதிவும் மேற்கொள்ளப்படாது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மோசடி நபர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam