கொழும்பில் Beauty Salon செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை - ஆபத்தான பெண் கண்டுபிடிப்பு
கொழும்பில் அழகு சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறி பெறுமதியான பொருட்கள் அடங்கிய பைகளை திருடும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அழகுக்கலை நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் பைகளை ஒரு இடத்தில் வைத்து விட்டு அந்த பைகள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சந்தர்ப்பங்களை இந்த பெண் பயன்படுத்திக் கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த பெண் அங்குள்ள பைகளில் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் கூறியுள்ளனர்.
அவிசாவளை, கம்பளை, பொரலஸ்கமுவ, வரக்காபொல ஆகிய பல நிலையங்களில் இந்த திருட்டை வெற்றிகரமாக நடத்தி வந்த பெண், அவிசாவளையில் உள்ள அழகு நிலையம் ஒன்றிற்கு வந்து சலூன் உரிமையாளரின் பணப்பையை திருடிய போது சிக்கியுள்ளார்.
இதற்கு முன்னரும் பெண் ஒருவரின் பையை திருடுவது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய, சிசிடிவி வீடியோக்களை பெற்று விசாரணை நடத்தி வந்த பொலிஸார், இறுதியில் இந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
இந்த பெண்ணால் திருடப்பட்ட வங்கி அட்டைகளை பயன்படுத்தி தங்கம், கைத்தொலைபேசிகள், ஆடைகள் போன்றவற்றை வாங்கியுள்ளதாகவும், இவை அனைத்தையும் அவர் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.