கொழும்பில் இரவில் பயணிக்கும் வாகனங்களை குறி வைத்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்
கொழும்பு, அம்பத்தல, சந்திரிகா குமாரதுங்க மாவத்தை வீதியில் பயணிக்கும் வாகனங்களை கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று செயற்படுவதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதியில் ஆணிகளுடனான பலகை ஒன்று வைத்து அதன் மூலம் வாகனங்கள் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் குழுவொன்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த மோசடியினால் பாதிக்கப்பட்ட பலர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் இது தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போதைப்பொருள்
அந்தப்பகுதியிலுள்ள போதைப்பொருள் பாவனையாளர்களால் இந்த கொள்ளை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.