கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்காக நிறுத்தப்படும் உணவகங்கள்தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடுத்தப்படும் தனியார் பஸ் வண்டிகள் உணவுக்காக நிறுத்தப்படும் ஹோட்டல்களில் தரத்தில் குறைந்த 57 ஹோட்டல்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இத்தகைய ஹோட்டல்களின் தரத்தையும் உணவுப்பொருட்களின் விலை மட்டங்களையும் சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.
ஐந்து ஹோட்டல்கள்
இந்த நடவடிக்கையில் பொது சுகாதார உத்தியோகத்தர்களும் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு - யாழ்ப்பாணம் மார்க்கத்தில் குறைந்த தராதரங்களுடன் இயங்கிய ஐந்து ஹோட்டல்கள் இனங்காணப்பட்டன.
இத்தகைய ஹோட்டல்களில் பஸ் வண்டிகளை நிறுத்த வேண்டாம் என சாரதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாளாந்தம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கும் பல பஸ் சேவைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri