புகைப்பிடிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
புகைப்பிடிப்பவர்களுக்கு கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் புகைப்பிடிக்காதவர்களிலும் 14 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
வீட்டிலோ அல்லது வெளியிடம் ஒன்றிலோ புகைப்பிடிப்பவர்களுடன் இருந்தால் கோவிட் தொற்று தாக்கும் சாத்தியம் அதிகமாகும்.
கோவிட் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம் என்பது போன்றே அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களினால் மரணம் நேரக்கூடிய சாத்தியமும் அதிகமாகும்.
தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும் புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் பழக்கமுடையவர் என்றால் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும் என டொக்டர் சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
