நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு கடற்றொழிலாளர்களை செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் வடக்கு இலங்கைக்கு அருகில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலி வரையான கடற்பரப்பு
அந்தவகையில் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கிலிருந்து வடமேற்கு திசைக்கு மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையிலும், புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வரையிலும் வீசக்கூடும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் திசை மாறுபடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாக காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        