கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நிலவும் வானிலை நிலவரங்களை கருத்திற்கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
இதற்கமைய, கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

குறித்த கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக விடுக்கப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கடற்றொழில் மற்றும் கடற்சார் சமூகத்தினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் 5 கோரிக்கைகளை முன்வைத்து தனிநபர் உண்ணாவிரதப் போராட்டம் - அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதி
வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட இயக்குநர் பாக்யராஜ் உடலம்..! நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள முதலமைச்சர் விஜய்
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri