நிறைவேற்று அதிகாரம் கொண்ட கோட்டாபய தப்பியோடும் நிலை ஏன் வந்தது! இலங்கை இன்னும் எரியக்கூடிய ஆபத்தில்
இலங்கையில் புயலுக்கு பின்னர் அமைதி நிலவினாலும், நாடு இன்னும் எரியக்கூடிய நிலையிலேயே உள்ளது என்று செய்தித்தாள் ஒன்றின் ஆசிரியர் தலையங்கம் எச்சரித்துள்ளது.
வெறும் 'அமைதியான போராட்டம்' என்று பலர் உண்மையாக நம்பியதன் மறைப்பில், அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு தலையீடு இருந்திருக்கலாம் என்று குறித்த செய்தியில் சந்தேகம் வெளியிடபட்டுள்ளது.
இந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அதிகாரம் மிக்க நிறைவேற்று ஜனாதிபதிக்கு, ஒளிந்து கொள்ள இடமில்லாமல் தப்பிச் செல்ல வேண்டிய நிலை எப்படி வந்தது? அவரைத் தோளில் சுமந்து உயர் பதவிக்கு வந்தவர்கள் எங்கே? ஜூலை 9 மற்றும் அதற்கு பின்னர் வந்த திகதிகளில் அவரின் விதி குறித்து உளவுத்துறையின் அறிக்கைகள் கிடைக்கவில்லை என்றால் அது பாரதூரமான விடயமாகவே கருதப்பட வேண்டும்.
உளவுத்துறையின் அறிக்கைகள்
ஜனாதிபதி மாளிகையையும் ஜனாதிபதி செயலகத்தையும் கைப்பற்ற அனுமதித்த இராணுவத்தினரின் மனநிலையை அவர் குறைத்து மதிப்பிட்டாரா? பின்வாசல் வழியாக அருகில் உள்ள கடற்படைத் தலைமையகத்திற்கு சென்று போர்க் கப்பலில் கடலுக்குச் சென்ற தந்திரோபாயப் பின்வாங்கலை தவிர வேறு திட்டம் எதுவும் அவருக்கு இல்லையா?
தாம் போராட்டங்களை ஒடுக்கினால் அமெரிக்காவில் ஓய்வுபெறும் போது 'போர்க் குற்றங்கள்' சுமத்தப்படும் என்று அவர் பயந்தாரா? எதுவாக இருந்தாலும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் மேடையில் வந்த ஒரு மனிதனாக, கண்ணியமற்ற முறையில் அவமானப்பட்டு ஓடிப்போனவராக அவர் தமது மரியாதையை கெடுத்துக்கொண்டார்.
அரசும், நாடும் இயல்பு நிலைக்குத் திரும்பி, பழைய நிலையில்தள்ளாடிக் கொண்டிருக்கும் போது, எதிர்ப்பாளர்கள் இன்னும் எவ்வளவு தூரம் தங்கள் போராட்டத்தை நீட்டி, அரசியலமைப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஆயுதப்படைகளை சோதிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.
இந்த தெரு நாடகம் எதுவுமே எரிபொருள் மற்றும் எரிவாயு அல்லது மருந்துகளின் அடுத்த கப்பலைக் கொண்டு வரவும், நீண்டகாலமாக அவதிப்படும் மக்களுக்கு பொருளாதார பிணையை வழங்கவும் உதவப் போவதில்லை.
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை வழங்கல்
அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் நாட்டின் முதல் முன்னுரிமையாக பொருளாதார ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதற்கு பல மைல்கள் இன்னும் செல்ல வேண்டியுள்ளது.
இந்த தேசத்தின் பிளவைத் தடுத்ததற்காக பெரும்பான்மையினரால் விரும்பப்பட்ட அவர், வடக்கில் பிரிவினைவாதிகளாலும் தெற்கில் அதிருப்தியாளர்களாலும் சமமாக வெறுக்கப்பட்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கூச்சலிட்ட அவர் தனது குடிமக்களின் அன்றாட பிரச்சினைகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டார்.
புத்திசாலித்தனமான ஆலோசனைக்கு எதிராக முட்டாள்தனமான மற்றும் மன்னிக்க முடியாத
முடிவுகளும் அவரின் இறுதி முடிவுக்கான காரணங்களாக அமைந்துவிட்டன”என கூறப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam
