ஏ.டி.எம் இயந்திரம் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த வெளிநாட்டவர்கள்!
பத்தேகம பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வெளிநாட்டவர்கள் இருவர் போலி அட்டைகளை பயன்படுத்தி பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளனர்.
இதன்போது இயந்திரத்தில் இருந்து 57 இலட்சம் ரூபாவையும், காலி கராப்பிட்டிய அரச வங்கியொன்றில் இருந்து 2,75,000 ரூபாவையும் மோசடியாகப் பெற்றுள்ளதாக பத்தேகம மற்றும் காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்தேகம கிராம வங்கி ஏ.டி.எம்.க்கு வந்துள்ள இரண்டு வெளிநாட்டவர்களும் போலி அட்டை மூலம் இயந்திரம் பழுதடையாமல் 1140 ரூபாய் 5000 நோட்டுகளை பெற்றுள்ளர்.

வெளிநாட்டவர்களின் போலி அட்டை
வங்கி முகாமையாளர் பத்தேகம பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாடுகளுக்கமைய, பாதுகாப்பு கமெரா காட்சிகளை ஆராய்ந்த போது மோசடி குறித்து தெரியவந்துள்ளது.

இதன்போது வங்கியின் கணினி தரவு அமைப்பில் பணம் இருப்பதைக் காட்டினாலும் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை என முகாமையாளர் பொலிஸாருக்கு மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காலி கராப்பிட்டிய அரச வங்கிக் கிளையில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து நேற்று இரண்டு வெளிநாட்டவர்கள் போலி அட்டையைப் பயன்படுத்தி 275,000 ரூபாவை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காலி தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam