நோய் அறிகுறி இருந்தால் விரைவில் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தல்
பக்கவாத நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு இலங்கை தேசிய பக்கவாத சம்மேளனத்தின் தலைவர் காமினி பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப்பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வைத்திய ஆலோசணை
பக்கவாத நோயை வீட்டிலேயே கண்டறிவது மிகவும் அவசியமானது.அதன்படி, அதனை அவதானித்து விரைவில் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
"நம் சமூகத்தில் நான்கு பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் பக்கவாதம் வர வாய்ப்புள்ளது. பக்கவாதம் என்பது ஒருவரின் உயிரைக் கொல்லும் ஒரு நோய். இலங்கையின் 90% தீவிர நோய், அதைத் தடுக்கக்கூடிய 10 விஷயங்கள் காணப்படுகின்றன.
இதற்கிடையில், இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, உடல் பருமன் மற்றும் புகைபிடித்தல் போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது அந்த இரத்தக் கட்டியைக் கரைக்கும் மருந்துகள் உள்ளன.
எனவே பக்கவாதத்தை வீட்டிலேயே கண்டறிந்து அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் செல்லுங்கள். பிரதானமாக இந்த நோயிக்கு மூன்று அறிகுறிகள் உள்ளன.
நோய் அறிகுறிகள்
வாய் கோணி செல்லல், கை அல்லது கால் உணர்வின்மை, வாய் குளறல் ஆகியவையாகும். கூடுதலாக, அவர்கள் கண்பார்வை இழக்கலாம். சமநிலையும் இழக்க நேரிடும். இவை அனைத்தும், உடனடியாக நடக்கும். அப்படியானால், அது நடக்கும் நேரத்தை கவனிக்க வேண்டியது அவசியம்.
பக்கவாதத்தின் பலவீனத்தைக் குறைக்க நாம் வைத்திருக்கும் அடுத்த ஆயுதம் தான் மறுவாழ்வு. அதாவது, நோயாளியின் பலவீனத்தைப் பொறுத்து, உடல் சிகிச்சை, தொழில் சிகிச்சை, பேச்சு சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சீனாவிற்கு கிடைத்த பேரிடி... ஐபோன் 17 உற்பத்தியை இந்த நாட்டிற்கு மாற்ற ஆப்பிள் திட்டம் News Lankasri

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
