மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரை வாயை மூடுமாறு எச்சரித்த சபை உறுப்பினர்
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வின் போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரை வாயை மூடுமாறு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் எச்சரித்தது மாநகர கட்டளைச்சட்டத்தினை மீறும் செயற்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மாநகரசபை உறுப்பினர்களிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்ட வேளையில் சபையினை அமைதிப்படுத்த மாநகரசபை முனைந்தபோது மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரான திலீப்குமார் மாநகர முதல்வரை வாயை மூடுமாறு அவமதிக்கும் வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையானது உயரிய சபையாகவும் ,மாநகர முதல்வர் மாநகர மக்களின் உயரிய பொறுப்புமிக்கவராகவும் கருதப்படும் நிலையில் சபையில் இவ்வாறான உறுப்பினர்கள் நடந்துகொள்ளும் விதம் மாநகரசபையின் சிறப்பினை பாதிக்கும் வகையில் அமைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
