தாழ்வான வெள்ளப்பகுதிகளின் மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் நீர்மட்டம் அதிகரிப்பு காரணமாக 09 ஆறுகளை அண்மித்த தாழ்வான வெள்ளப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் பிரிவு வெள்ளத்திற்கு முன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி - தெதுரு ஓயா, நஹா ஓயா, அத்தனகலு ஓயா, களனி கங்கை களு கங்கை, பெந்தர, ஜின் கங்கை நில்வல கங்கை, கலா ஓயா ஆகிய ஆறுகளிலேயே நீா்மட்டம் அதிகாித்துள்ளது.
எனவே மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறுக் கோரப்பட்டுள்ளனா்.
இதற்கிடையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) சிலப் பகுதிகளுக்கு நிலச்சரிவு முன் எச்சரிக்கையை விடுத்துள்ளது:
எச்சரிக்கை நிலை 1 - (மஞ்சள்)
பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை. கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க, காலி மாவட்டத்தில் நாகொட, யக்கலமுல்ல மற்றும் நெலுவ. களுத்துறை மாவட்டத்தில் ஹொரண மற்றும் இங்கிரிய. கண்டி மாவட்டத்தில் கங்கா இஹல கோரளே, யட்டிநுவர, பஸ்பாகே கோரளே, கங்காவட கோரளே, உடுநுவர,தொலுவ, ஹரிஸ்பத்துவ, பாதஹேவஹெட்ட, உடபலத. கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, ரம்புக்கன, மாவனல்ல, குருநாகல் மாவட்டத்தில் மல்லவப்பிட்டிய, மாவத்தகம, இரத்தினபுரி மாவட்டத்தில் நிவிதிகல, எலபாத, கிரியெல்ல, குருவிட்ட.
எச்சரிக்கை நிலை 2 - (செம்மஞ்சள்.)
மாத்தளை மாவட்டத்தில் ரத்தோட்ட, உக்குவெல.
காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, பத்தேகம.
களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை, பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள.
கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல மற்றும் தெஹியோவிட்ட.
குருநாகல் மாவட்டத்தில் உள்ள நாரம்மல.
இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம, இரத்தினபுரி, எஹலியகொட, கலவான.