அமெரிக்காவுடன் போர்..! பதற்றத்தை தனிக்க தயாராகும் ஈரான்
போரைத் தவிர்ப்பதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தனது நாடு விரும்புவதாக ஈரானின் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார்.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்தியகிழக்கில் வைத்து அச்சுறுத்தல்கள் தொடர்பில் முன்வைத்த கருத்தை பெஷேஷ்கியன் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பெஷேஷ்கியன்,
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை
“நாங்கள் போரை நாடவில்லை, பேச்சுவார்த்தை மற்றும் உரையாடலை நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் பயப்படவில்லை.
மேலும் எங்கள் சட்ட உரிமைகளிலிருந்து நாங்கள் எந்த வகையிலும் பின்வாங்க மாட்டோம்” என்று மசூத் பெஷேஷ்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் பெஷேஷ்கியன் எதனை மையப்படுத்தி இந்த கருத்துக்களைக் குறிப்பிட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை,
எனினும், இந்த வாரம் மத்திய கிழக்குப் பயணத்தின் போது ட்ரம்ப் , “அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈரான் "விரைவாக முன்னேற வேண்டும்" இல்லையென்றால் "பாரதூரமான விளைவுகள் ஏற்படும்" என்று கூறியுள்ளார்.
இதன் பின்னனியில் ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளைக் கட்டுப்படுத்துவதையும் அதன் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை நிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவும் ஈரானும் ஞாயிற்றுக்கிழமை ஓமானில் தங்கள் நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையை தற்போது நிறைவு செய்துள்ளன.
அமைதி பேச்சுவார்த்தை
இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்த பெஷேஷ்கியன்,
“ஒருபுறம், ட்ரம்ப் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை பற்றி பேசுகிறார், மறுபுறம், கொலைக்கான மிகவும் அதிநவீன கருவிகளைக் கொண்டும் முரண்பாடான அறிக்கைகள் மூலமாகவும் (நம்மை) அச்சுறுத்துகிறார்.
அவர் ஒரே நேரத்தில் அமைதி, இரத்தக்களரி மற்றும் பாதுகாப்பின்மை பற்றிய செய்திகளை அனுப்புகிறார்." என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
