உக்ரைன் தலைநகரில் ஒலிக்கும் அபாய சப்தம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடையும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
ரஷ்யாவின் முக்கிய நகரமான கிரிமீயா மற்றும் மாஸ்கோ நகரத்தின் மீது நடந்த உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலையடுத்து எந்த நேரத்திலும் ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைன் மீது பதிலடி தாக்குதல் நடத்தும் எனவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
அபாய சப்தம்
மேலும், இரவு நேரங்களில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், கீவ் நகரில் தாக்குதல் தொடர்பான அபாய சப்தம் எழுப்பியும் பாதுகாப்பு தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடிபொருள் கிடங்கு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலை முறியடித்துள்ளதாக ரஷ்ய தரப்பிலிருந்து விளக்கமளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |