பாகிஸ்தான் கப்பலுடன் போர் பயிற்சியா! மறுக்கிறது இலங்கையின் கடற்படை
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (பிஎன்எஸ்) தைமூருடன் இணைந்து இலங்கையின் கடற்படையினர் போர் பயிற்சிகளை நடத்தவுள்ளனர் என்ற செய்தியை இலங்கையின் கடற்படை மறுத்துள்ளது.
இந்த கப்பல் கடந்த 12ஆம் திகதியன்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது. நாளை 15 ஆம் இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது.
இந்தநிலையில் கொழும்புக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இந்த கப்பலுடன், இலங்கையின் கடற்படையினர் போர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையின் தகவல்
வெளிநாட்டு கடற்படை கப்பல்கள் உத்தியோகபூர்வ துறைமுக அழைப்புகளை மேற்கொண்ட பின்னர், தீவை விட்டுப் புறப்படும் போது, இலங்கை கடற்படையினர் வழக்கமான ஈடுபாடாக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
வெளிநாட்டு கடற்படைகளுடன் கூட்டாண்மை மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்துவதே இந்த நோக்கமாகும்.
இதேபோன்ற பயிற்சியின் ஒரு பகுதியாக, தைமூர் மற்றும் இலங்கையின் சிந்தூரலா கடற்படை கப்பல் என்பன, பயிற்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னர் பல தடவைகள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான், ஜேர்மனி, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் கடற்படைகளுடன் இதேபோன்ற கடற்பயிற்சிகளை இலங்கை கடற்படை மேற்கொண்டுள்ளது என்றும் இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
