போர் பதற்றத்தின் மத்தியில் ஈரானின் அதிரடித் தடை
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் அரசு தனது நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அனைத்து வகையான உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
இது குறித்து ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிரடித் தடை
ஈரானிய மக்கள் அனைவருக்கும் தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, போர்ச் சூழலைச் சமாளிக்க ஈரான் இத்தகைய அவசரகால நடவடிக்கைகளை நடைமுறைபடுத்தி வருகிறது.
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam