பாகிஸ்தான் கடற்படையுடனான போர் பயிற்சி: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்
பாகிஸ்தான் கடற்படையினருடனான போர்ப்பயிற்சி கைவிடப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு மறுப்புத் தெரிவித்துள்ளது.
இந்திய அழுத்தம் காரணமாக இலங்கையில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் கடற்படையினருடனான போர்ப்பயிற்சியொன்று கைவிடப்பட்டுள்ளதாக நேற்றையதினம்(19) இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், பாகிஸ்தானிய போர்க்கப்பல் இலங்கையின் திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை தந்து இருநாட்டு கடற்படையினரும் போர்ப்பயிற்சிகளை மேற்கொண்ட பின் கடந்த மார்ச் 06ம் திகதி இங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதாக பாதுகாப்பு அமைச்சு விளக்கமளித்துள்ளது.
போலியான தகவல்
எனவே, போர்ப் பயிற்சிகள் கைவிடப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |