பொன்சேகா மீது போர்க்குற்றம் ஏன் முன்வைக்கப்படவில்லை? மகிந்த அணியினர் கேள்வி
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது எதற்காகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேள்வி எழுப்பியுள்ளது.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை சரத் பொன்சேகா முன்வைத்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச தூக்குத் தண்டனைக்குத் தகுதியானவர் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள்
இதையடுத்தே, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சரத் பொன்சேகா செயற்படுகின்றார் என்றும், அதற்காகவே அவருக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
இறுதிப் போரை முடிப்பதற்கு முன்னர், மகிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது எனச் சரத் பொன்சேகா கூறி வருகின்றார். இது பொய்யான அறிவிப்பாகும்.
போர் முடிவுக்கு வரப்போகின்றது என்பது தெரிந்திருந்தால், எதற்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக சரத் பொன்சேகா சீனாவுக்குச் சென்றார்? முடியப்போகும் போருக்கு எதற்காக ஆயுதங்கள்? போர் முடியப்போகின்றது என மகிந்தவுக்கும் தெரியாது. பொன்சேகாவுக்கும் தெரியாது.
போரின்போது பணியாற்றிய படைத் தளபதிகளில் பொன்சேகாவைத் தவிர, ஏனைய அனைவருக்கும் எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், பொன்சேகாவுக்கு எதிராக எந்தத் தரப்பாலும் போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை. ஏனெனில், படையினரை ஐரோப்பிய நாடுகளிடம் காட்டிக் கொடுத்தவரே பொன்சேகாதான் என குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
