பிரித்தானியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் போர்! ஆனால் மக்களுக்கு தெரியாது:முன்னாள் ராணுவ தலைவர்
பிரித்தானியாவின் தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு உக்ரைன் போர் முக்கிய காரணம் எனவும் ரஷ்யாவுடன் பிரித்தானியாவும் போரில் ஈடுபட்டு வருவதாகவும் பிரித்தானியாவின் முன்னாள் ராணுவ தலைவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார இயலாமை
போர் நடவடிக்கையானது 9 மாதங்களாக நடந்து வரும் நிலையில், 2013 முதல் 2016 வரை பிரித்தானியாவின் பாதுகாப்புப் படைகளின் தலைவராக பணியாற்றிய லார்ட் ஹொட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு உக்ரைன் போர் முக்கிய காரணம்.
பிரெக்சிட் மற்றும் அரசாங்க பொருளாதார இயலாமை ஆகியவை வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் மிகவும் குறிப்பிடத்தக்க காரணியாக இருக்கும் போது நாம் உண்மையில் போரில் இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அது பெரும்பாலான மக்கள் அங்கீகரிக்கும் வகையிலான போர் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன் மீது ரஷ்யா தனது போர் நடவடிக்கைகளை தொடங்கிய பிறகு பிரித்தானியா மற்றும் பிற நேட்டோ உறுப்பினர்கள் உக்ரைனில் நேரடியாக போரில் ஈடுபட மறுத்துவிட்டனர்.
மேற்கு நாடுகள் அவர்கள் ரஷ்யாவுடன் முழுநீள போரை தவிர்க்க விரும்புவதாக தெரிவித்தமையே இதற்கு காரணமாகும்.

இருப்பினும் பிரித்தானியா அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் பல உக்ரைனுக்கு இராணுவ ஆதரவையும் நிதி உதவியையும் வழங்கியுள்ளனர். மேலும் மாஸ்கோ மீது பல அடுக்கு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளனர்.
ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு இடையே ஒரு பரந்த மூலோபாய மோதல் இருக்கின்றது.
அத்துடன் ஜனாதிபதி புடின் இன்னும் வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது அல்லது ரஷ்யாவால் குறைந்தபட்சம் சாதகமான அமைதிக்கான சூழ்நிலையை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
அசின், சிம்பு இணைந்து நடிக்கவிருந்த கைவிடப்பட்ட படம்.. இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா! First லுக் போஸ்டர் இதோ Cineulagam