கடலட்டைப் பண்ணை வேண்டும்:யாழில் ஆர்ப்பாட்டம் (video)
கடலட்டைப் பண்ணையை வேண்டுமென வலியுறுத்தி இன்று(30.12.2022) யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று நடத்தப்பட்டது.
சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணி பண்ணை கடற்கரையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தை அடைந்தது.
பேரணியின் நிறைவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கான மனு கடற்றொழில் அமைச்சரின்
பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.
கடற்றொழிலாளர்களின் கண்டனம்
கடந்த காலங்களில் பல்வேறு தொழில் முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும், தற்போதைய நிலையில், பொருளாதார சுமைகளை எதிர்கொள்ளுமளவிற்கு போதுமானளவு வருமானத்தினை பெறமுடியாதுள்ளது.

இந்நிலையில் நல்ல வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய கடலட்டைப் பண்ணை தங்களுக்கு வேண்டுமென வலியுறுத்தியே கடற்றொழிலாளர்களால் போராட்டம் இடம்பெற்றது.

பேரணியில் கலந்து கொண்டோர் கடலட்டை பண்ணை தொடர்பாக முன்வைக்கப்படும்
விமர்சனங்கள் தொடர்பாகவும் கண்டனத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan