தலைமறைவாகியுள்ள சட்டத்தரணி நீதிமன்றில் மனு
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணி குணரட்ன வன்னிநாயக்க நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
நேற்றைய தினம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தருடன் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமை பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது.
நீதிமன்ற வளாகத்தின் வாகன தரப்பிடத்திலிருந்து வாகனமொன்றை வெளியே எடுத்த போது இந்த முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த சட்டத்தரணியையும் கைது செய்ய பொலிஸார் தேடுதல் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தம்மை கைது செய்ய வேண்டாம் எனக் கோரி குணரட்ன வன்னிநாயக்க நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றில் முன்னிலையாகும் வரையில் தம்மை கைது செய்வதனை தவிர்க்குமாறு அவர் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு இன்று (15) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, சட்டத்தரணி குணரட்ன வன்னிநாயக்கவை கைது செய்யும் நோக்கில் மூன்று பொலிஸ் குழுக்கள் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று அறிவித்திருந்தது.





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan
