தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி ஓய்வு
தேசிய புலானய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார்.
நேற்றைய தினம் 60 வயது பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு பிரிவு பிரதானியாக தலைவராக பணியாற்றிய வனிகசூரிய ஓய்வு பெற்றுக்கொண்டார்.
தேசிய புலனாய்வு பிரிவு
இலங்கை இராணுவத்தின் முக்கிய பதவிகளை வகித்துள்ள மேஜர் ஜெனரல் வனிகசூரிய, கடந்த ஜனவரி மாதம் தேசிய புலனாய்வு பிரிவு பிரதானியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் நாட்டின் புலனாய்வு வலையமைப்பை வலுப்படுத்துவதிலும், பல்வேறு அரச மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் மேஜர் ஜெனரல் வனிகசூரிய முக்கிய பங்கு வகித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மேஜர் ஜெனரல் வணிகசூரிய தனது பதவிக் காலத்தில் தேசிய பாதுகாப்பிற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பு மிக்க சேவை மற்றும் பங்களிப்பிற்கு பாதுகாப்பு அமைச்சு அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.