பொலிஸ் அலுவலரின் துப்பாக்கி தாக்குதலில் இருந்து தப்பிய பொறுப்பதிகாரி!
காலி, வந்துரம்ப பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் அலுவலரின் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் இருந்து தப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொறுப்பதிகாரியுடன் ஏற்பட்ட தர்க்கத்தை அடுத்து, தாக்குதவதற்காக ஆயுத அறையில் இருந்து குறித்த அலுவலர் துப்பாக்கி ஒன்றை எடுக்க முயன்றுள்ளார்
எனினும் ஏனைய அலுவலர்கள், அவரை தடுத்து அழைத்துச்சென்றனர்.
இதன்போது அவர் அங்கிருந்து தப்பிச்சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய கட்டிடம் கட்டுவதற்காக, பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் உள்ள சில மரங்களை தறிக்கக் கூறியபோதும் குறித்த அலுவலர் வளாகத்தில் உள்ள அனைத்து மரங்களையும் தறிக்கமுயன்றுள்ளார்.
இதனையடுத்தே இருவருக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.
இதற்கிடையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி, அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் அலுவலர் ஒருவர் நான்கு அலுவலர்களை சுட்டுக் கொன்றதுடன், பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட்ட இருவரை காயப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
