மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை ஆரம்பம்
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரையானது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தினை நேற்று மாலை வந்தடைந்தது.
மே மாதம் முதலாம் திகதி தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தலைமையில் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது.
புனித பாதயாத்திரை
வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை 7 மாவட்டங்களையும் இணைத்து 55 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இந்த புனித பாதயாத்திரை இலங்கையின் மிகநீண்ட தூர கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றது.
நேற்று மாலை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்த பாதயாத்திரை குழுவினர் அங்கு தங்கியிருந்து இன்று காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டு பாதயாத்திரையினை ஆரம்பித்தனர்.
எதிர்வரும் 20ஆம் திகதி உகந்தைமலை முருகன் ஆலயத்திலிருந்து யால காட்டுவழிப்பாதை திறக்கப்படு ம்போது அதன் ஊடாக பயணித்து 25ஆம் திகதி கதிர்காம கந்தன் ஆலயத்தினை சென்றடையவுள்ளதாக சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தெரிவித்தார்.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

தனது Toronto சொகுசு வீட்டை விற்கும் சர்ச்சைக்குரிய கனேடிய எழுத்தாளர்: அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
