பெண்களுக்காக 3 பொலிஸ் அதிகாரிகளின் மோசமான செயல் - அதிரடியாக விதிக்கப்பட்ட தண்டனை
மாத்தறையில் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் மூன்று அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை பிரிவின் பதில் பொலிஸ் கண்காணிப்பாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மூன்று அதிகாரிகளும் மாத்தறை வல்கம பகுதியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்திற்கு சென்று முகாமையாளருடன் கடுமையான வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்கு இலவசமாக சேவைகளைப் பெற முயன்றுள்ளனர்.
தகாத நடத்தை
இது தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, மூன்று அதிகாரிகளும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது.
அதிகார துஷ்பிரயோகம், பொலிஸ் சேவைக்கு அபகீர்த்தி மற்றும் தகாத நடத்தையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மூன்று அதிகாரிகளுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரிகள் கம்புருபிட்டிய, திஹகொட மற்றும் மாவரல காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மாத்தறை பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
