நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் எவ்வித நோக்கமும், திட்டமும் இன்றி நாட்டை ஆட்சி செய்வதனால் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி - ஹக்மீமன பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
காலி மாவட்டத்தில் தேயிலை தொழிற்துறைகளில் ஈடுபடுவோர் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
உர தட்டுப்பாடு காரணமாக தேயிலை செய்கை வழமைக்கு திரும்ப இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படும்.
உலகில் தரமான உரத்தை 350 ரூபாவிற்கு வழங்க முடியாது. அரசாங்கம் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருந்தது.
தரம் குறைந்த உர வகைகளை பயன்படுத்துவதனால் மண் வளம் இழக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அடுத்த ஆண்டு நடுப்பகுதி அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை மக்களுக்கு ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
