வவுனியாவில் டீசலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையினால் பொதுமக்கள் எரிபொருளுக்காக தொடர்ச்சியாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
வவுனியாவில் கடந்த 10 நாட்களாக டீசல் கிடைக்காத நிலையில் இன்று ஒரேயொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று டீசலை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
உழவு இயந்திரங்கள் மற்றும் பேருந்துகள் உட்பட டீசல் வாகனங்களுடன் சாரதிகள் யாழ். வீதி மற்றும் மன்னார் வீதியில் தரித்து நின்று எரிபொருளை பெற்றிருந்ததுடன், விவசாய தேவைக்காக டீசலை பெற்றுக்கொள்பவர்களும் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தம்பதியாய் வந்த ஜேர்மன் பெண் - இந்திய இளைஞருக்கு சோதனை! உயிரை காப்பாற்றி கொள்ள ஓடிய பரிதாபம்.. வீடியோ News Lankasri

தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு கூட வராத நடிகர் விஜய்! உருக்கத்துடன் மகனுக்காக தந்தை செய்த செயல் News Lankasri
