முஸ்லிம்களின் மீது வஹாப்வாதிகள் மேற்கொள்ள இருக்கும் தாக்குதல்: தேரர் எச்சரிக்கை
நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை கொண்டாடும் சூபி முஸ்லிம் சமூகத்தின் மீது வஹாப்வாதிகள் தாக்குதல்களை நடத்துவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளதால் இம்மாதம் முழுவதும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்(Gnanasara Tero), பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையிலுள்ள சூபி முஸ்லிம் மக்களைப் பாதுகாக்குமாறு கோரி பொலிஸ்மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதில் இலங்கையிலுள்ள சூபி முஸ்லிம் சமூகம், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை இம்மாதத்தில் கொண்டாடும் நிலையில் அதனை வஹாப்வாதி குழுக்கள் பல்வேறு வகையில் சீர்குலைப்பதற்கு முயற்சிப்பது குறித்து தொடர்ச்சியாக அவதானிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது பத்திரிகையி கண்ணோட்டம்,

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
