புதுக்குடியிருப்பில் இரு வாகனங்கள் மோதி விபத்து
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து பரந்தன் வீதியூடாக சென்ற வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (07.01.2026) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து பரந்தன் வீதியூடாக சென்ற வெகனார் ரக வாகனம், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் பிரதான வீதியிலிருந்து திரும்ப முற்பட்ட போது அதே திசையில் வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் வெகனார் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
விசாரணை முன்னெடுப்பு
இதன்போது வாகனங்களில் பயணித்தவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri