வாக்னர் கூலிப்படையினரை கல்லால் அடித்துக்கொல்லும் ரஷ்யர்கள்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்
ஆட்சி கவிழ்ப்புக்கு திட்டமிட்ட வாக்னர் கூலிப்படையினரை ரஷ்யர்கள் கல்லால் அடித்துக்கொல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்ய படையினருக்கு உதவிய வாக்னர் கூலிப்படை, திடீரென ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக திரும்பிய நிலையில், ரஷ்யர்கள் வாக்னர் கூலிப்படைக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
வாக்னர் குழுவினர் நாடு திரும்ப புடின் அனுமதி
இந்நிலையில், ரஷ்யாவுக்கு மீண்டும் திரும்பும் வாக்னர் கூலிப்படையினரை ரஷ்ய மக்கள் தாக்குவதாகவும், சிலரை கல்லால் அடித்துக் கொன்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
போரில் பங்கேற்ற வாக்னர் குழுவினர் நாடு திரும்பலாம் என ரஷ்ய ஜனாதிபதி புடின் அனுமதியளித்துள்ள நிலையில், பொதுமக்கள் அவர்களுக்கெதிராக வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு கல்லால் அடித்துக்கொல்லப்பட்ட வாக்னர் கூலிப்படையினர் சிலர் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |