போலந்து மீது தாக்குதல் நடத்த வாக்னர் படை இரகசிய திட்டம்!
போலந்து மீது தாக்குதல் நடத்த வாக்னர் படை இரகசிய திட்டமிட்டிருக்கலாம் என போலந்து பிரதமர் மோராவைக்கி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திட்டத்திற்காக வாக்னர் படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கள் நாட்டு எல்லையை நெருங்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
போலந்துக்குள் ஊடுருவ முயற்சி
தற்போது இந்தப் படைவீரர்கள் பெலாரஸ் நாட்டின் குரோட்னோவில் முகாமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெலாரசின் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் போல வேடமிட்டு வாக்னர் வீரர்கள் போலந்துக்குள் ஊடுருவ முயற்சிக்கலாம் என்றும் போலந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெலாரஸிலிருந்து புலம்பெயர் மக்கள் சட்டவிரோதமாக இடம்பெயர்வதையும் வாக்னர் கூலிப்படையினர் எளிதாக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சுமார் 100 வாக்னர் துருப்புக்கள் போலந்து மற்றும் லிதுவேனியன் எல்லைகளுக்கு அருகில் உள்ள க்ரோட்னோ நகருக்கு அருகில் நெருங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |