புடினிற்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை! ஜெலென்ஸ்கி பரபரப்பு தகவல்
அழிவு பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி காட்டமாக கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய இராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வாக்னர் தலைவர் பிரிகோஸின் பெரும் கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் வாக்னர் கூலிப்படையின் ஆயுதக் கிளர்ச்சி தேச துரோக நடவடிக்கை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் பலவீனம்
இதேவேளை ரஷ்யாவில் இராணுவத்துடன் மோத துணிந்துள்ள வாக்னர் கூலிப்படையினர் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி புடின் சிறப்பு விமானத்தில் தலைநகர் மாஸ்கோவை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் பகிரப்பட்டுள்ளன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
We all remember how the head of Russia threatened the world in 2021. He had some ultimatums, he was trying to show a kind of strength...
— Володимир Зеленський (@ZelenskyyUa) June 24, 2023
The year 2022 showed that he confused – confused his illusions and the lies he was fed with strength. They in the Kremlin are capable of… pic.twitter.com/rwOhLvQJAF
அதில், '2021இல் ரஷ்யாவின் ஜனாதிபதி உலகை எப்படி அச்சுறுத்தினார் என்பது நம் அனைவருக்கும் நினைவிருக்கிறது. அவருக்கு சில இறுதி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம்.
ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உக்ரைனில் எத்தனை நாட்கள் தனது படைகளை வைத்துள்ளதோ, அவ்வளவு பாரிய பிரச்சினை ரஷ்யாவிற்கு ஏற்படும்' என தெரிவித்துள்ளார்.
Everyone who chooses the path of evil destroys himself. Who sends columns of troops to destroy the lives of another country and cannot stop them from fleeing and betraying when life resists. Who terrorizes with missiles, and when they are shot down, humiliates himself to receive…
— Володимир Зеленський (@ZelenskyyUa) June 24, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
